மக்கள் தொலைக்காட்சியின் மண் பயனுற வேண்டும் என்ற பயணத்தின் ஒரு துளியாய் விவசாய நிகழ்ச்சிகளிலிருந்து பெறப்படும் தகவல்கள் இடபெறும் வலைப்பூ. மண் பயனுற மக்கள் வளர வேண்டும்.

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2009

மக்கள் விவசாயம் அறிமுகம்

வணக்கம்,

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்

தொழுதுண்டு பின்செல் பவர்.

குடிமக்கள் மேம்பாட்டை கருத்தில்கொண்டு சமூக பங்களிப்போடு கூடிய நிகழ்ச்சிகளை பாரம்பரியம் காத்திடும் வகையிலும், தாய்மொழியை வளர்த்திடும் நோக்கிலும் "மண் பயனுற வேண்டும்" என்ற கருத்தினைக் கொண்டு மிகத்திறம்பட வலம் வரும் மக்கள் தொலைக்காட்சியில் இடம் பெரும் விவசாய நிகச்சிகளான "மலரும் பூமி" "உழவர் சந்தை" ஆகியவற்றில் இடம்பெறும் தகவல்களை மீளத்தருவதை நோக்கமாகக் கொண்டு தொடங்கியுள்ளேன்.



இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்போரும் பார்வையாளர்களும் வேண்டுவது இந்நிகழ்ச்சிகளின் மறு ஒளிபரப்பாகும். அத்தேவைகள் சிறிதேனும் நிறை வேறுமாயின் அதுவே இவ்வலைப்பூவின் வெற்றியாகக் கருதப்படும்.



மக்கள் வழியில், மக்களின் பங்களிப்பை உறுதி செய்யும் விதமாக பிறர் தரும் தகவல்களும் இடம்பெறச் செய்வோம். தகவல் கிடைக்கப் பெற்றவர்கள் அனுப்பித்தரலாம், வரவேற்கிறோம்.



மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளிலிருந்து பெறப்பட்ட தகவல்கள் பலவற்றை குறித்து வைத்திருந்ததினால் அவற்றை பிறர் பயன்படச் செய்யவேண்டும் என்பது பலநாள் திட்டம். அதை செயல்படுத்திட எண்ணி, ஆக்கப்பணிகள் செய்து கொண்டிருக்கும் போது, வாசலில் பூக்காரரின் அழைப்பு, கதவைத் திறந்தவுடன் "அய்யா ஹரிதாஸ்" அவர்களின் குரலைக் கேட்டவர், மக்களில் இடம்பெறும் ஏற்றுமதி நிகழ்ச்சியில் வருபவரின் தொலைபேசி எண் கிடைக்குமா என்று வினவினார். மக்களின் வெற்றியை உணரமுடிந்தது. கூடவே, எனது இம்முயற்சியின் தெவையும்.

மண்பயனுறச் செய்யும் இவர்களின் நோக்கம் புரிந்து, அனுமதிகூட இல்லாமல் இதைத் தொடங்குகிறேன், அரவணைப்பார்கள் என்ற புரிதலோடு. வளர்க மக்கள் தொலைக்காட்சியின் தொண்டு.

நன்றி.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு