மக்கள் தொலைக்காட்சியின் மண் பயனுற வேண்டும் என்ற பயணத்தின் ஒரு துளியாய் விவசாய நிகழ்ச்சிகளிலிருந்து பெறப்படும் தகவல்கள் இடபெறும் வலைப்பூ. மண் பயனுற மக்கள் வளர வேண்டும்.

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2009

உழவர் சந்தை நிகழ்ச்சி ஓர் அறிமுகம்


உழவர் சந்தை:
மக்கள் வழங்கும் முத்தான மூன்று விவசாய நிகழ்ச்சிகளில் முதன்மையான நிகழ்ச்சி எதுவென்றால், பெரும்பாலானோரின் வாக்கு உழவர் சந்தை நிகழ்ச்சிக்குத்தானிருக்கும். அந்த அளவு விவசாயம் சாராத மக்களையும் கூட தன்பக்கம் ஈர்த்த ஒரு நிகழ்ச்சியாக விளங்குகிறது. அதற்கு முதற்காரணம் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பான பங்களிப்பை நல்கிவரும் தகவல் களஞ்சியம் அய்யா ஹரிதாஸ் அவர்களாகும். மக்கள் தொலைக்காட்சியோடு இணைந்து இவர் செய்து வரும் சாதனையென்பது, அரசால் அறிவிக்கப்பட்ட பசுமைப்புரட்சி, வெண்மை புரட்சியெல்லாம் கடந்த, மக்கள் பங்களிப்போடு கூடிய உண்மையான ஒரு விவசாயப் புரட்சியாகும்.

இந்நிகழ்ச்சியில் பங்குகொள்ளும் பலரும், இந்நிகழ்ச்சியின் காரணமாகவே தாங்கள் புதியதாக விவசாயத்திற்கும் அது சார்ந்த தொழிலுக்கும் வருவதாகக் கூறுவதே இதற்குத் தக்க சான்றாகும்.

அதை மெய்ப்பிக்கும் வகையிலேயே, இந்நிகழ்ச்சியின் நோக்கமாக இவர் கூறும், “சரியான தகவல், சரியான நபருக்கு, சரியான நேரத்தில் சென்றடைய வேண்டும்” என்பதும், தகவல் பரிமாற்றம், விவசாயம் சார்ந்த விற்பனை மற்றும் தேவையை நிறைவேற்றுவது எனும் கூற்றுக்கள் உள்ளதைக் காணலாம்.

உழவர் சந்தை நிகழ்ச்சியில் தொடக்கமாக, சந்தை மற்றும் பொருளாதார நிலைகளைப் பற்றிய அறிவிப்பினை ஹரிதாஸ் அய்யா அவர்கள் வழங்குகிறார்கள். அடுத்து, நேயர்களின் தொலைபேசி அழைப்புக்களுக்கு பதிலலிக்கிறார்.

அடுத்து வரும் இடைவேளைக்குப் பிறகு, மதிப்புக்கூட்டுதல் என்ற நிகழ்ச்சியில், சிறந்த மதிப்புக்கூட்டப்பட்ட பொருளினை அறிமுகம் செய்கிறார். அதைத் தொடர்ந்து மீண்டும் நேயர்களின் கேள்விக்கு பதில்லிக்கிறார்.

சிறிது இடைவெளியில், இரண்டாவது இடைவேளையும் தொடர்ந்து மீண்டுமொரு மதிப்புக்கூட்டிய பொருளினை அறிமுகம் செய்கிறார். அடுத்து நேயர்களின் கேள்களுக்கு பதிலலித்துவிட்டு, நிகழ்ச்சியின் இறுதியில் வரும் நாட்களில் நடைபெறும் விவசாயம் சார்ந்த பயிற்சிகள், நிகழ்ச்சிகள் குறித்தான குறிப்புக்களை வழங்குகிறார்கள்.

இந்நிகழ்ச்சியில் பங்குகொள்ளும் எவரும் வரும்காலங்களில் சிறந்த தொழிமுனைவராகவும், விவசாயியாகவும் வருவதோடு, உணவு உற்பத்தியிலும் பொருளாதார மேம்பாட்டிற்கும் பெரும் பங்காற்றக் கூடியவர்களாக வருவர் என்பது உறுதி.
இந்நிகழ்ச்சியில் பங்குகொள்ள அழைக்க வேண்டிய மக்கள் தொ.கா. எண் : 044-2826 1111.
அய்யா ஹரிதாஸ் அவர்களின் கைப்பேசி எண் : 9444146807


மக்கள்... மக்களுக்காக... மக்களால்...
மக்களே வாருங்கள்... மக்களுக்கு வாருங்கள்... மகிழ்வோடு வாழுங்கள்...
நன்றி

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு