மக்கள் தொலைக்காட்சியின் மண் பயனுற வேண்டும் என்ற பயணத்தின் ஒரு துளியாய் விவசாய நிகழ்ச்சிகளிலிருந்து பெறப்படும் தகவல்கள் இடபெறும் வலைப்பூ. மண் பயனுற மக்கள் வளர வேண்டும்.

புதன், 19 ஆகஸ்ட், 2009

மலரும் பூமி - 17.08.2009

இன்றைய நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இடம்பெற்ற "வளர்சோலை" யில் பப்பாளிச் சாகுபடியும் அதன் பயனையும் விளக்கினார்கள். பப்பாளியிலிருந்து பால் எடுத்து அதனிலிருந்து "பப்பைன்" என்ற வேதிப்பொருள் தயாரிக்கப் படுவதாகவும், அவை செரிமான மருந்து, ரொட்டி, முகப்பூச்சு போன்ற பல்வேறு பொருட்கள் தயாரிக்கப் பயண்படுவதாக தெரிவித்தார்கள்.

இது தொடர்பில், மேலாளர் திரு செல்வராசு, வீரப்பனூர், கோவை மா., (94437 11160) அவர்கள் தெரிவித்த மேலதிக தகவல்கள்:

சாகுபடி முறை: ஒரு ஏக்கரில் 200 முதல் 400 கன்றுகள் வரை நடலாம். நாற்றங்கால் முறையிலோ நேரடி விதைப்பு முறையிலோ செய்யலாம். நாற்றங்கால் முறையில், இரண்டு மாதக் கன்றுகளை எடுத்து ஒரு குழியில் நான்கு செடிகளை நடவேண்டும். குழிகள் 6க்கு 6 அடியில் அமைக்க வேண்டும். நட்ட 3 - 4 மாதங்களில் பூ பூக்கும், ஒத்தப் பூவாக இருந்தால் பெண் என்றும், பல பூக்கள் இருந்தால் அவை ஆண் மரமென்றும் அறியலாம். ஆண் மரக்கன்றை எடுத்து விட்டு, தொடர்ந்து உரமிட்டு வளர்த்தால், 6 - 7 மாதத்தில் பலன் கிடைக்கும். ஆண்டு முழுவதும் பால் எடுக்கலாம். வருடத்திற்கு ஒரு ஏக்கரில் 1500 - 2000 கிலோ பால் எடுக்கலாம். இதன் மூலம் ஒன்றரை இலட்சம் முதல் இரண்டு இலட்சம் வரை ஆண்டு வருமானமாக ஒரு ஏக்கரில் கிடைக்கும்.

பால் எடுக்க, ஒரு கிலோவிற்கு உரூபாய் 20.00 கூலியாகத் தரவேண்டும். இதன் மூலம் ஒரு நாளைக்கு 10 -15 கிலோ பால் எடுக்கும் தொழிலாளி ஒரு நாளைக்கு 200 -300 உரூபாய் கூலியாகப் பெறுவார்.

பால் எடுத்தப் பழத்தினை விற்பனை செய்யாலம், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம்.

பப்பாளி காயின் மூலம் டூட்டி புரூட்டி தயாரிக்கலாம். இலைகளை நிழலில் உலரவைத்து பொடி செய்து விற்பனை செய்யலாம். மரத்தினை பேப்பர் தொழிற்சாலைகளுக்கு விற்காலாம். இதன் வேர் ஒரு மருந்துப் பொருளாகப் பயன்படுகிறது.

பப்பாளி மூலம் உழவர்கள் நல்ல பொருளாதாரத்தைப் பெறலாம் என்பதோடு, பப்பாளி என்பதற்கு ஆங்கிலத்தில் "பப்பையா" என்பதும் இதன் வேர்ச்சொல் "பப்பாளி" என்ற தமிழ்ச்சொல் என்பதிலும் நாம் கூடுதல் பெருமையடையலாம்.

இரண்டாம் பகுதியில், மேட்டுப்பாளையம் காரமடையைச் சேர்ந்த "ஹமீது" ( 94435 23115) என்பவர் பயிர் செய்து வரும் "பச்சோளி"யைப் பற்றி விளக்கினார்கள். இது ஒரு சிறந்த ஊடு பயிர் என்பதும், இதனிலிருந்து நறுமணப் பொருட்கள் தயாரிக்கிறார்கள் என்றும் கூறினார். இவற்றை பயிர் செய்யும் உழவர்கள், பச்சை இலையாகவோ, காய்ந்த இலையாகவோ அல்லது காய்ச்சி தைலமாகவோ விற்கலாம்.

மூன்று மாத நர்சரிக் கன்றை பயிர்செய்தால், 7ம் மாதம் முதல் அறுவடை செய்யலாம் என்றும் ஒரு வருடத்திற்கு 4,5 முறை அறுவடை செய்யாலம் என்றும் கூறினார்.

அடுத்த இருபது வருடங்களுக்கு தன் விலையில் வீழ்ச்சி இருக்காது என்பது இவர் தந்த கூடுதல் தகவல்.

பண்ணைச் செய்திகள்:
தஞ்சாவூரில் நகரிலேயே மாட்டுப்பண்ணை வைத்திருக்கும் ஓய்வுபெற்ற பொறியாளர் திரு.திருநாவுக்கரசர்
( 97517 79163) அவர்களின் பேட்டி இடம்பெற்றது. 2400 ச. அடியில், 15 மாடுகளை வைத்துக் கொண்டு, நாளொன்றுக்கு 10 மாடுகள் மூலம் குறைந்தது 100 லிட்டர்
பாலினை லிட்டர் 15 உரூபாய் என்ற விலையில், தனது குடியிருப்பை சுற்றியுள்ளவர்களுக்கே விற்பனை செய்துவிடுகிறார். இதன் மூலம் மாத வருவாய் உரூபாய் 10000.00 கிடைப்பதாகக் கூறுகிறார்.

மாடுகளுக்குத் தேவையான புல் "கோ -3, 4" இரண்டினையும் தனது பண்ணையிலேயே பயிரிடுகிறார். 5 தொழிலாளர்கள் இவரிடத்தில் பணிபுரிகிறார்கள். இதே இடத்திலுள்ள மரங்களில் வைத்து 25நாட்டுக் கோழிகளையும் எவ்வித செலவுமின்றி வளர்த்து வருகிறார்.

அடுத்து, அரியலூர் கார்குடியைச் சேர்ந்த திருமதி தனபால் அவர்கள், 1/2 ஏக்கர் நிலத்தில் புடலை சாகுபடியின் மூலம் ஆண்டிற்கு ஒன்றரை இலட்சம் வரையும், 10 சென் ட் அவரையில் 25,000 உரூபாய் வரையும், பாகலில் 70,000 வரையும் சம்பாதிப்பதாகக் கூறினார்.

ஊரகப் பயணம்:
கோவை காந்திபுரத்தைச் சார்ந்த சிவக்குமார் (93629 44555) அவர்கள், இயற்கை வேளான் விளைபொருள் அங்காடி வைத்துள்ளதை காட்டினார்கள்.

நன்றி.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு