மக்கள் தொலைக்காட்சியின் மண் பயனுற வேண்டும் என்ற பயணத்தின் ஒரு துளியாய் விவசாய நிகழ்ச்சிகளிலிருந்து பெறப்படும் தகவல்கள் இடபெறும் வலைப்பூ. மண் பயனுற மக்கள் வளர வேண்டும்.

வியாழன், 27 ஆகஸ்ட், 2009

மலரும் பூமி 20.08.2009

வளர்சோலை:

இன்றைய வளர்சோலையில் நேற்றைக்கு இடம்பெற்ற கோகோ பற்றிய அறிமுகமே தொடர்ந்தது. இனி, கோவை வேளாண் பல்கலைக் கழக பேராசிரியர் முனை.இராஜாமணி() அவர்கள் கூறியவை:

* கோகோ சாகுபடிக்கு சொட்டு நீர் பாசனம் மிகச்சிறந்த வழியாகும்.
* அடிக்கடி கவாத்து செய்வது அவசியம், அதிகம் வளரவிடக்கூடாது.
* 25 அடி இடைவெளியில் உள்ள தென்னை மரங்களுக்கிடையில் 12 x 12 அடி இடைவெளியில் கோகோ பயிரிடவேண்டும்.
* அரைக்கு அரை அடி அளவில் அரை அடி ஆழத்தில் குழி எடுத்து ஒரு வாரம் ஆறப்போட வேண்டும்.
* குழியில் 5 கிலோ தொழு உரமிட்டு மேல் மண் சேர்த்து குழியை மூடவேண்டும்.
* குழியின் நடுவில் கையால் அழுத்தி செடியை நட்டு தண்ணீர் விடவேண்டும்.
* இரண்டு நாட்களுக்கு ஒரு முறை நீர் விட்டு வரவேண்டும்.
* ஒரு வருட செடிக்கு நாளொன்றுக்கு 15 லிட்டர் நீர் தேவை, 3 வருட செடிக்கு 20, 25 லிட்டர் நீர் தேவை.

அடுத்து கோகோ சாகுபடியில் அனுபவமிக்க சேத்துமடையைச் சேர்ந்த விவசாயி திரு.பிரசாத் (99768 26228) அவர்கள் கூறியது:
* ஒரு செடிக்கு ஆண்டொண்றுக்கு 2 கிலோ கிடைக்கிறது, கேரளாவில் 4 கிலோ வரை கிடைக்கிறது.
* கிலோ 100 வரை விற்க்கப்படுகிறது.
* ஒரு ஏக்கரில் ஆண்டிற்கு உரூபாய்40,000.00 வரை இலாபம் கிடைக்கும்.
* ஒரு ஏக்கருக்கு ஆகும் செலவு உரூபாய் 5000 முதல் 8000 வரை ஆகிறது.

அவரைத் தொடர்ந்து பொள்ளாச்சி தம்பட்டகிழவன் புதூரைச் சேர்ந்த விவசாயி கூறியவை:
* கோகோ பயிரிடுவதால் தழைச்சத்து அதிகம் கிடைக்கிறது, இதன் மூலம் நிலத்தில் ஈரப்பதம் கூடுதலாக இருக்கும்.
* ஒரு ஏக்கரில் 200 செடி வரை நடலாம்.
* 45 டிகிரி வெப்பம் வரை தாங்கும்.
* ஒரு செடி குறைந்தது இரண்டு கிலோ வரை தரும்.
* தோப்பில் உழவு செய்ய வேண்டியதில்லை, களை அதிகம் வருவதில்லை.
*ஒரு ஏக்கருக்கு ஆண்டொண்றுக்கு தழைச்சத்து 800 கிலோ வரை கிடைக்கிறது.
* பூமியின் வளம் குறைவதில்லை.
* ஒப்பந்தம் செய்து கொள்வதால் ஒரு கிலோ குறைந்தது 60க்கும், விலை அதிகமானால் அன்றைய விலைக்கும் எடுத்துக்கொள்கிறார்கள்.
* இடைத்தரகர்கள் யாருமின்றி நிறுவனத்திற்கு நேரடியாக விற்பனை செய்யலாம்.

பதப்படுத்துதல் தொழில்நுட்ப அலுவலர் திரு மோகன் (99524 11947):
* பறித்தெடுத்த கோகோவை 5 நாட்களுக்கு குவியலாக இட்டு வைக்க வேண்டும்.
* பிறகு கத்தியை பயன்படுத்தாமல், மரக்கட்டை கொண்டு அடித்து உடைத்தெடுக்க வேண்டும்.
* இவ்விதம் எடுத்த விதைகளை தொட்டியில் இட்டு சணல் பையால் மூடவேண்டும்.
* இவ்வாறு 7 நாட்கள் வைத்திருந்து பிறகு வெயிலில் காயப்போட வேண்டும்.

தேசிய தோட்டக்கலை மைய ஆலோசகர் திரு.பெல்லி (94430 42458)கூறியவை:
* ஒரு ஹெக்டேருக்கு 3 ஆண்டுகள் வரை உரூபாய் 11750 வரை மானியமாக தருவார்கள்.
* இதனை முதலாமாண்டு 5625ம், இரண்டாமாண்டு 2259ம், மூண்றாம் ஆண்டு 3375ம் ஆக பிரித்துக் கொடுப்பார்கள்.
* இதைக்கொண்டு செடிகள் வாங்கவும், உரம் மருந்து தேவைக்கும் ஒரு பைசா செலவில்லாமல் பயிரிடமுடியும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு