மக்கள் தொலைக்காட்சியின் மண் பயனுற வேண்டும் என்ற பயணத்தின் ஒரு துளியாய் விவசாய நிகழ்ச்சிகளிலிருந்து பெறப்படும் தகவல்கள் இடபெறும் வலைப்பூ. மண் பயனுற மக்கள் வளர வேண்டும்.

வெள்ளி, 11 செப்டம்பர், 2009

21.08.2009 : உழவர் சந்தை

வறட்சி காலங்களில் குறுகிய காலப் பயிர்களான மானாவாரிப் பயிர்கள், மூலிகைகள் போன்றவற்றை பயிரிட திரு.ஹரிதாஸ் அவர்கள் ஆலோசனைக் கூறினார்கள்.

அழைப்பாளர்கள்:
1.பாரதிதாசன், திருவரங்கம், திருச்சி (9443376962): இன்சுலின் செடிகள் விற்பனைக்கு, மாதம் 2, 3 செடிகள் விற்பனைக்கு உள்ளது. விலை 15 - 20 உரூபாய்க்கு கிடைக்கும்.

2. முத்துக்குமார், இரும்புக்கடை தஞ்சை (9994901135): 20 ஆண்டுகள் வயதுடைய 300 தேக்கு மரங்கள், வைரம் பாய்ந்தவை விற்பனைக்கு உள்ளது. மீன் குஞ்சுகள் (கட்லா, ரோகு, மிருக ரகம்) விற்பனைக்கு உள்ளன. இயற்கை உரங்களான பஞ்சகாவ்யா, மண் புழு உரமும், இயற்கை முறையில் விளைவித்த அரிசி (கட்டைப் பொன்னி, ADT 43 ரகம்) கிலோ 36 உரூபாய் விலையில் விற்பனைக்குக் கிடைக்கும்.

3. சிவக்குமார், கடலூர் மா. (9865675821), நெல் விற்பனைக்கு -500 மூட்டை, 60கிலோ மூட்டை உரூபார் 1200.00க்கு கிடைக்கும்.

4. கவிதா, உசிலம்பட்டி (9843752598): கடலை எண்ணை விற்பனைக்கு. 16 கிலோ எடை கொண்ட கொள்கலன் 800.00 உரூபாய்.

5. நடராசன், திருக்கழுகுன்றம் (9952206436): ADT 46 ரக விதை நெல் தேவை.

6. மணி, புதுக்கோட்டை (98940 41196): சவுக்கு கன்றுகள் விற்பனைக்கு, கன்று ஒரு உரூபாய். சிப்பி காளான் கிலோ 60 - 80க்கு கிடைக்கும்.

7. மதிவாணன், நாராயணபுரம், கடலூர் மா. (97860 82795): சின்னப் பொன்னி 20 மூட்டை விதை நெல் விற்பனைக்கு.

8. செந்தில்குமார், பொள்ளாச்சி (9362947696): தென்னைக்கு இடையில் வளர்க்க தக்கைப் பூண்டு கிடைக்கும், வேப்பம் முத்துக்கள் தேவை.

9.குணசேகரன், ஈரோடு மா. (9894662200): பொன்குரண்டி மூலிகை தேவை.

10. சதீசு (99621 06256) திருச்சி-புதுக்கோட்டை சாலையில் 27 ஏக்கர் நிலம் விற்பனைக்கு, ஏக்கர் 7 இலட்சம். தேயிலைப் பண்ணை தேவை, 200 - 250 ஏக்கர் வரை.

11. இரமேசு, ஆந்திரா (09962796868): பாமாயில் விதைகள் தேவை.

12. அக்பர், திருஆரூர் (9715040484): நாட்டுக்கோழி முட்டை விற்பனை, தினம் 100 முட்டைகள் வரையும், 10 உரூபாய் விலையில் கிடைக்கும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு