மக்கள் தொலைக்காட்சியின் மண் பயனுற வேண்டும் என்ற பயணத்தின் ஒரு துளியாய் விவசாய நிகழ்ச்சிகளிலிருந்து பெறப்படும் தகவல்கள் இடபெறும் வலைப்பூ. மண் பயனுற மக்கள் வளர வேண்டும்.

வியாழன், 27 ஆகஸ்ட், 2009

மலரும் பூமி 20.08.2009

வளர்சோலை:

இன்றைய வளர்சோலையில் நேற்றைக்கு இடம்பெற்ற கோகோ பற்றிய அறிமுகமே தொடர்ந்தது. இனி, கோவை வேளாண் பல்கலைக் கழக பேராசிரியர் முனை.இராஜாமணி() அவர்கள் கூறியவை:

* கோகோ சாகுபடிக்கு சொட்டு நீர் பாசனம் மிகச்சிறந்த வழியாகும்.
* அடிக்கடி கவாத்து செய்வது அவசியம், அதிகம் வளரவிடக்கூடாது.
* 25 அடி இடைவெளியில் உள்ள தென்னை மரங்களுக்கிடையில் 12 x 12 அடி இடைவெளியில் கோகோ பயிரிடவேண்டும்.
* அரைக்கு அரை அடி அளவில் அரை அடி ஆழத்தில் குழி எடுத்து ஒரு வாரம் ஆறப்போட வேண்டும்.
* குழியில் 5 கிலோ தொழு உரமிட்டு மேல் மண் சேர்த்து குழியை மூடவேண்டும்.
* குழியின் நடுவில் கையால் அழுத்தி செடியை நட்டு தண்ணீர் விடவேண்டும்.
* இரண்டு நாட்களுக்கு ஒரு முறை நீர் விட்டு வரவேண்டும்.
* ஒரு வருட செடிக்கு நாளொன்றுக்கு 15 லிட்டர் நீர் தேவை, 3 வருட செடிக்கு 20, 25 லிட்டர் நீர் தேவை.

அடுத்து கோகோ சாகுபடியில் அனுபவமிக்க சேத்துமடையைச் சேர்ந்த விவசாயி திரு.பிரசாத் (99768 26228) அவர்கள் கூறியது:
* ஒரு செடிக்கு ஆண்டொண்றுக்கு 2 கிலோ கிடைக்கிறது, கேரளாவில் 4 கிலோ வரை கிடைக்கிறது.
* கிலோ 100 வரை விற்க்கப்படுகிறது.
* ஒரு ஏக்கரில் ஆண்டிற்கு உரூபாய்40,000.00 வரை இலாபம் கிடைக்கும்.
* ஒரு ஏக்கருக்கு ஆகும் செலவு உரூபாய் 5000 முதல் 8000 வரை ஆகிறது.

அவரைத் தொடர்ந்து பொள்ளாச்சி தம்பட்டகிழவன் புதூரைச் சேர்ந்த விவசாயி கூறியவை:
* கோகோ பயிரிடுவதால் தழைச்சத்து அதிகம் கிடைக்கிறது, இதன் மூலம் நிலத்தில் ஈரப்பதம் கூடுதலாக இருக்கும்.
* ஒரு ஏக்கரில் 200 செடி வரை நடலாம்.
* 45 டிகிரி வெப்பம் வரை தாங்கும்.
* ஒரு செடி குறைந்தது இரண்டு கிலோ வரை தரும்.
* தோப்பில் உழவு செய்ய வேண்டியதில்லை, களை அதிகம் வருவதில்லை.
*ஒரு ஏக்கருக்கு ஆண்டொண்றுக்கு தழைச்சத்து 800 கிலோ வரை கிடைக்கிறது.
* பூமியின் வளம் குறைவதில்லை.
* ஒப்பந்தம் செய்து கொள்வதால் ஒரு கிலோ குறைந்தது 60க்கும், விலை அதிகமானால் அன்றைய விலைக்கும் எடுத்துக்கொள்கிறார்கள்.
* இடைத்தரகர்கள் யாருமின்றி நிறுவனத்திற்கு நேரடியாக விற்பனை செய்யலாம்.

பதப்படுத்துதல் தொழில்நுட்ப அலுவலர் திரு மோகன் (99524 11947):
* பறித்தெடுத்த கோகோவை 5 நாட்களுக்கு குவியலாக இட்டு வைக்க வேண்டும்.
* பிறகு கத்தியை பயன்படுத்தாமல், மரக்கட்டை கொண்டு அடித்து உடைத்தெடுக்க வேண்டும்.
* இவ்விதம் எடுத்த விதைகளை தொட்டியில் இட்டு சணல் பையால் மூடவேண்டும்.
* இவ்வாறு 7 நாட்கள் வைத்திருந்து பிறகு வெயிலில் காயப்போட வேண்டும்.

தேசிய தோட்டக்கலை மைய ஆலோசகர் திரு.பெல்லி (94430 42458)கூறியவை:
* ஒரு ஹெக்டேருக்கு 3 ஆண்டுகள் வரை உரூபாய் 11750 வரை மானியமாக தருவார்கள்.
* இதனை முதலாமாண்டு 5625ம், இரண்டாமாண்டு 2259ம், மூண்றாம் ஆண்டு 3375ம் ஆக பிரித்துக் கொடுப்பார்கள்.
* இதைக்கொண்டு செடிகள் வாங்கவும், உரம் மருந்து தேவைக்கும் ஒரு பைசா செலவில்லாமல் பயிரிடமுடியும்.

மலரும் பூமி 19.08.2009

வளர்சோலை:
இன்றைய வளர்சோலை நிகழ்சியில் "கோகோ" சாகுபடி குறித்தான விளக்கங்கள் அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் காட்பரீஸ் நிறுவன இணை, துணைத் தலைவர் திரு.மகுடபதி, எர்ணாகுளம் (0484-2575505) அவர்கள் கலந்துகொண்டு விளக்கமளித்தார்கள்.

* இந்தியாவில் கோகோவின் தேவை 20,000.00 டன்களாக உள்ள நிலையில் அதில் பகுதியான 10000 டன் உற்பத்தி என்ற அளவிலேயே உள்ளது.
* இவர்களால் 20 கன்று உற்பத்தி நிலையங்கள் (நர்சரி) மூலம் உற்பத்தி செய்யப்படும் கன்றுகள், தேசிய தோட்டக்கலை வளர்ச்சி மையம மூலமாக விற்பனை செய்யப்படுகின்றன.
* உலக அளவில் இதன் உற்பத்தி 35 இலட்சம் டன்களாக உள்ளது.
* உப்புத் தண்ணி இல்லாத எல்லா இடங்களிலும் ஆண்டு முழுவதும் வளரும் தன்மை கொண்டது.

தொடர்ந்து இராஜேஷ், மேலாளர், பொள்ளாச்சி (99524 11947) அவர்கள் கூறியவை:
* தமிழ்நாட்டில் எட்டு இடங்களில் உள்ள கன்று உற்பத்தி நிலையங்கள் மூலம் 16 மாவட்டங்களில் "நேசனல் ஹர்டிகல்ச்சர் மிசன்" வழி விற்பனை செய்யப்படுகின்றன.
* முதல் மூன்று வருடங்களுக்கு அரசு மானியமாக உரூபாய் ௧௧,௨௫0.00 வழங்கப்படுகிறது.
* 2007 - 6000, 2008-09 - 15000, 2009-10 - 200000 ஏக்கரில் உற்பத்தி செய்யப்படுகிறது.
* தமிழ்நாட்டில் 200 டன் உற்பத்தி தற்போது செய்யப்படுகிறது.
* ஒரு ஏக்கரில் 20000 முதல் 25000 வரை ஆண்டு வருமானம் கிடைக்கும்.
* பயிரிடும் முன்பு கண்டிப்பாக மண், நீர் பரிசோதனை அவசியம்.

அடுத்து, முனை.இராசமணி, கோவை வேளாண் பல்கலைக்கழகம் (98657 96667) அவர்கள் கூறியது,
* செடிகளை 10 அடி முதல் 12 அடி உயரத்தில் பராமரிக்க வேண்டும்.
* 10 -12 அடி இடைவெளியில் இருக்கவேண்டும்.
* செடி வைக்க அரை அடி ஆழம், அகலம், நீளத்தில் குழி எடுத்து வைக்க வேண்டும்.
* இவை வளர 50-70% நிழல் தேவை, அதிகப்படியான வெயில் வளர்ச்சியைப் பாதிக்கும்.
* இவற்றிற்கு தன் மகரந்த சேர்கை கிடையாது என்பதால், இவற்றை தனியே வளர்த்தெடுத்து பயிரிடவீண்டும்.

புதன், 26 ஆகஸ்ட், 2009

18 08 2009

பண்ணைச் செய்திகள் :

இந்நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த "சம்ருதி" அமைப்பின் மேலாளர் திரு சுரேசு அவர்கள் (97861 00946) பங்குகொண்டார்கள்.
* வேளான் கண்டுபிடிப்பாளர்களைக் கண்டறிந்து அவர்களின் கண்டுபிடிப்புக்களை ஊக்குவித்து, அவை குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டு தேவையான மேம்படுகளைச் செய்து, பயனாளர்களிடம் சேர்ப்பதே முதன்மையான நோக்கம் என்று கூறினார்.
* சம்ருதியில் பயிற்சி பெற்றவர்கள் சம்ருதி அம்மா / சம்ருதி அய்யா என்று அழைக்கப்படுவார்கள். இவர்கள் வழி சம்ருதி பொருட்கள் விற்பனைச் செய்யப்படும்.
* இதுவரை சம்ருதி 23 பொருட்களை வெளியிட்டுள்ளது.
* கோபி பகுதியில் மட்டும் 5 அங்காடிகள் உள்ளன. இதன் பொறுப்பாளர் திரு.சரவணன் (99861 00936).
* இவர்கள் கண்டுபிடித்த பால் கறவை இயந்திரம் மிக மலிவான விலையில் உருபாய். 6000.00 க்குக் கிடைக்கிறது. இதன் பயனாக, 3 நிமிடத்தில் 5 லிட்டர் பால் கறக்க இயலும். மடியிலிருந்து இரத்தம் வருவதில்லை. ஒவ்வொரு காம்பினையும் தனித்தனியே கட்டுப்படுத்த இயலும். மின்சாரம் தேவையில்லை. இதன் கைப்பிடியை 15 முறை அடித்தால் போதும், குடுவையில் வெற்றிடம் ஏற்பட்டு பால்கறக்க ஏதுவாகும்.
* பயனாளர் திரு. சுந்தரேசன், நல்ல கவுண்டான் பாளையம் (9965544705)
* இயற்கைத் தீவன தயாரிப்பாளர் திரு.சுதர்சன், கோபி (9843068291)
* இயற்கை இடுபொருள் தயாரிப்பாளர் திரு. அகஸ்டின், திருச்சி (9443425164)
* ஊர்சா அடுப்பு: ஒருங்கிணைப்பாளர் திரு.சீத்தாலட்சுமி, சத்தியமங்கலம்.
* இதன் விலை உரூபய் 900.00. இதற்கான எரிபொருள் வேளான் கழிவுப் பொருட்களான கரும்பு சோகை, சோளக்கருது, கடலை தோல், புளியன்தொடு முதலியனவற்றைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது.
* இதிலிருந்து புகை வருவதில்லை.
* இதன் எரிபொருள் கிலோ பை உருபாய் 30.00௦௦க்குக் கிடைக்கிறது. ௧ மணி நேரம் எரிய அரை கிலோ எரிபொருள் தேவைப்படும்.

புதன், 19 ஆகஸ்ட், 2009

மலரும் பூமி - 17.08.2009

இன்றைய நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இடம்பெற்ற "வளர்சோலை" யில் பப்பாளிச் சாகுபடியும் அதன் பயனையும் விளக்கினார்கள். பப்பாளியிலிருந்து பால் எடுத்து அதனிலிருந்து "பப்பைன்" என்ற வேதிப்பொருள் தயாரிக்கப் படுவதாகவும், அவை செரிமான மருந்து, ரொட்டி, முகப்பூச்சு போன்ற பல்வேறு பொருட்கள் தயாரிக்கப் பயண்படுவதாக தெரிவித்தார்கள்.

இது தொடர்பில், மேலாளர் திரு செல்வராசு, வீரப்பனூர், கோவை மா., (94437 11160) அவர்கள் தெரிவித்த மேலதிக தகவல்கள்:

சாகுபடி முறை: ஒரு ஏக்கரில் 200 முதல் 400 கன்றுகள் வரை நடலாம். நாற்றங்கால் முறையிலோ நேரடி விதைப்பு முறையிலோ செய்யலாம். நாற்றங்கால் முறையில், இரண்டு மாதக் கன்றுகளை எடுத்து ஒரு குழியில் நான்கு செடிகளை நடவேண்டும். குழிகள் 6க்கு 6 அடியில் அமைக்க வேண்டும். நட்ட 3 - 4 மாதங்களில் பூ பூக்கும், ஒத்தப் பூவாக இருந்தால் பெண் என்றும், பல பூக்கள் இருந்தால் அவை ஆண் மரமென்றும் அறியலாம். ஆண் மரக்கன்றை எடுத்து விட்டு, தொடர்ந்து உரமிட்டு வளர்த்தால், 6 - 7 மாதத்தில் பலன் கிடைக்கும். ஆண்டு முழுவதும் பால் எடுக்கலாம். வருடத்திற்கு ஒரு ஏக்கரில் 1500 - 2000 கிலோ பால் எடுக்கலாம். இதன் மூலம் ஒன்றரை இலட்சம் முதல் இரண்டு இலட்சம் வரை ஆண்டு வருமானமாக ஒரு ஏக்கரில் கிடைக்கும்.

பால் எடுக்க, ஒரு கிலோவிற்கு உரூபாய் 20.00 கூலியாகத் தரவேண்டும். இதன் மூலம் ஒரு நாளைக்கு 10 -15 கிலோ பால் எடுக்கும் தொழிலாளி ஒரு நாளைக்கு 200 -300 உரூபாய் கூலியாகப் பெறுவார்.

பால் எடுத்தப் பழத்தினை விற்பனை செய்யாலம், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம்.

பப்பாளி காயின் மூலம் டூட்டி புரூட்டி தயாரிக்கலாம். இலைகளை நிழலில் உலரவைத்து பொடி செய்து விற்பனை செய்யலாம். மரத்தினை பேப்பர் தொழிற்சாலைகளுக்கு விற்காலாம். இதன் வேர் ஒரு மருந்துப் பொருளாகப் பயன்படுகிறது.

பப்பாளி மூலம் உழவர்கள் நல்ல பொருளாதாரத்தைப் பெறலாம் என்பதோடு, பப்பாளி என்பதற்கு ஆங்கிலத்தில் "பப்பையா" என்பதும் இதன் வேர்ச்சொல் "பப்பாளி" என்ற தமிழ்ச்சொல் என்பதிலும் நாம் கூடுதல் பெருமையடையலாம்.

இரண்டாம் பகுதியில், மேட்டுப்பாளையம் காரமடையைச் சேர்ந்த "ஹமீது" ( 94435 23115) என்பவர் பயிர் செய்து வரும் "பச்சோளி"யைப் பற்றி விளக்கினார்கள். இது ஒரு சிறந்த ஊடு பயிர் என்பதும், இதனிலிருந்து நறுமணப் பொருட்கள் தயாரிக்கிறார்கள் என்றும் கூறினார். இவற்றை பயிர் செய்யும் உழவர்கள், பச்சை இலையாகவோ, காய்ந்த இலையாகவோ அல்லது காய்ச்சி தைலமாகவோ விற்கலாம்.

மூன்று மாத நர்சரிக் கன்றை பயிர்செய்தால், 7ம் மாதம் முதல் அறுவடை செய்யலாம் என்றும் ஒரு வருடத்திற்கு 4,5 முறை அறுவடை செய்யாலம் என்றும் கூறினார்.

அடுத்த இருபது வருடங்களுக்கு தன் விலையில் வீழ்ச்சி இருக்காது என்பது இவர் தந்த கூடுதல் தகவல்.

பண்ணைச் செய்திகள்:
தஞ்சாவூரில் நகரிலேயே மாட்டுப்பண்ணை வைத்திருக்கும் ஓய்வுபெற்ற பொறியாளர் திரு.திருநாவுக்கரசர்
( 97517 79163) அவர்களின் பேட்டி இடம்பெற்றது. 2400 ச. அடியில், 15 மாடுகளை வைத்துக் கொண்டு, நாளொன்றுக்கு 10 மாடுகள் மூலம் குறைந்தது 100 லிட்டர்
பாலினை லிட்டர் 15 உரூபாய் என்ற விலையில், தனது குடியிருப்பை சுற்றியுள்ளவர்களுக்கே விற்பனை செய்துவிடுகிறார். இதன் மூலம் மாத வருவாய் உரூபாய் 10000.00 கிடைப்பதாகக் கூறுகிறார்.

மாடுகளுக்குத் தேவையான புல் "கோ -3, 4" இரண்டினையும் தனது பண்ணையிலேயே பயிரிடுகிறார். 5 தொழிலாளர்கள் இவரிடத்தில் பணிபுரிகிறார்கள். இதே இடத்திலுள்ள மரங்களில் வைத்து 25நாட்டுக் கோழிகளையும் எவ்வித செலவுமின்றி வளர்த்து வருகிறார்.

அடுத்து, அரியலூர் கார்குடியைச் சேர்ந்த திருமதி தனபால் அவர்கள், 1/2 ஏக்கர் நிலத்தில் புடலை சாகுபடியின் மூலம் ஆண்டிற்கு ஒன்றரை இலட்சம் வரையும், 10 சென் ட் அவரையில் 25,000 உரூபாய் வரையும், பாகலில் 70,000 வரையும் சம்பாதிப்பதாகக் கூறினார்.

ஊரகப் பயணம்:
கோவை காந்திபுரத்தைச் சார்ந்த சிவக்குமார் (93629 44555) அவர்கள், இயற்கை வேளான் விளைபொருள் அங்காடி வைத்துள்ளதை காட்டினார்கள்.

நன்றி.

மலரும் பூமி - ஓர் அறிமுகம்


மலையாளம் மொழி தெரிந்தபடியாலும், வளைகுடா நாடுகளில் நமது அனுமதியின்றியே நமது கம்பிவட சேவையின் வழி வந்தமரும் மலையாள தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நல்லனவற்றை நேரம் கிடைக்கும்போதெல்லாம் பார்ப்பதுண்டு. அந்த வகையில் மிகவும் பிடித்தமான நிகழ்ச்சியாக மாறிய ஒன்று "ஜீவன்" தொ.கா வில் இடம்பெறும் "ஹரித கேரளம்" என்ற நிகழ்ச்சியாகும். இதன் பொருள் வேளான் கேரளம் என்று கொள்ளலாம்.
பல ஆண்டுகளாக கண்டுவரும் எனக்கு, ஒரு ஏக்கப் பெருமூச்சும் சிறிய பொறாமையும் கூட வந்ததுண்டு. தமிழ்நாட்டு வேளாண் செய்திகளைக் கூட காட்டிய இது போன்ற ஒரு நிகழ்ச்சி நமது தமிழ்த் தொ.கா களில் வராதா என்ற ஏக்கம்தான் காரணம்.
இன்றைக்கு, மலையாள தொ.காட்சிகளில் பெரும்பாலனவற்றில் இது போன்றதொரு நிகழ்ச்சி வாராமொருமுறையாவது வருகிறது.
இக்குறையைப் போக்கக் கூடியதுதான் மக்கள் தொ.கா வில் இடம்பெறும் "மலரும் பூமி". பெயருக்கேற்ற வகையில் இது தமிழகத்தை மலரச் செய்யும் என்றால் அது மிகையில்லை. அனைவரும் கண்டிப்பாக காணவேண்டியதொரு நிகழ்ச்சி.
நன்றி.

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2009

உழவர் சந்தை 14.08.2009

உழவர் சந்தை : 14.08.2009
சந்தை நிலவரம்: சந்தைப் புள்ளி -1.74 சதவீதம்.
164 மாவட்டங்கள் வறட்சியான மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவ மழை பொய்த்த்தன் காரணமாகவே இவ்வறட்சி ஏற்பட்ட்தாக நடுவண் அரசால் அறிவிக்கப்பட்ட்து.
இந்நிலையில், மகிழுந்து கடன் வட்டி விகித்த்தைக் குறைத்துள்ள அரசு, விவசாய கடன் வட்டி விகித்த்தை ஏன் குறைக்கவில்லை என்ற நாமெல்லாம் சிந்திக்க்க் கூடிய ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார்.

துளிகள்:
பன்றிக்காய்ச்சலுக்கு தமிழ் விவசாயம் சார்ந்த தீர்வுகள் என்ன என்ற கேள்விக்கு, துளசிச் சாறினை நாளும் இருமுறையும், நிலவேம்பு கசாயமும் குடிப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் பெறலாம் என்றும், கறந்த சூடான பாலும் வெங்காயம் வெள்ளைப்பூண்டும் கூட மிகுந்த நோய் எதிர்ப்பு சக்தியினைத் தரும் என்று பதில்லித்தார்.

வான் கோழி வளர்ப்பில் சிறந்து விளங்குபவர்கள்: மனோகரன், விருதுநகர் & K.V.பாலு, துறையூர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட 24 மூலிகை சாகுபடிக்கு 30% மும், மதிப்புக்கூட்டுதலுக்கு 50% மும் அரசு மானியம் தருகிறது.

வெண்ணிலா சாகுபடியில் தற்சமயம் அதிக லாபம் ஈட்டுவது கடினம். அதன் தாய் நாடான மடகஸ்கரில் உற்பத்தி அதிகமாயிருப்பதே அதன் காரணம்.

நேயர் வழங்கியத் தகவல்: Diclo finaz என்ற வேதிப்பொருள் கலந்த மருந்துகளை கால்நடைகளுக்கு கொடுப்பதனால், இறந்த அவற்றை உண்ணும் கழுகுகள் இனம் அழிந்து வருவதாகவும், இப்பொருள் கலந்த மருந்தினை தவிர்க்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். தகவல்: திரு.சரவணன், சென்னை. 9840036975.

உணவுப்பொருள் விற்ப்பனைக்கு, சான்றிதழ் பெற சென்னை சாஸ்திரிபவன் அலுவகத்தை அனுகவும். ஒரு பொருளுக்கு 7000 – 8000 கட்டணம் வசூலிக்கப்படும்.

விற்பனைப் பொருட்களை “பொதிக்க” (Pakking) தொடர்புகொள்ள வேண்டிய நிறுவன்ங்கள்:
இந்தியன் பொதி நிறுவனம்
(Indian Institute of Packaging - Chennai Plot no:169, Industrial Estate, Perungudi, Chennai - 600 096 Tel: 24960730, 24961560 / 9382199089Tel/Fax: 044-24961077. Email: iipche@giasmd01.vsnl.net.in / iipchennai@iip-in.com / www.iip-in com)

நடுவண் நெகிழி பொறியியல், தொழில்நுட்பக் கழகம்
(Central Institute of Plastics Engineering and Technology,
T.V.K. Industrial Estate, Guindy, Chennai – Ph.: 044-22254780, Fax: 22254787)

நேயர் சந்தை:
1. கோவில்பட்டி, தூத்துக்குடி / 9443120572 / நல்லெண்ணை விற்பனை, லிட்டர் 120/- உரூபாய்

2. கோபாலகிருட்டிணன், திருவல்லிக்கேணி, சென்னை / 984098007
அ) சிகப்பு, வெள்ளைத் தாமரைப் பூ எவ்வளவு இருந்தாலும் வேண்டும், விமான நிலையத்தில் கொண்டுத்தர வேண்டும்,
ஆ) பதப்படுத்தப்பட்ட பால் (மாதம் ஒரு கொள்கலன் (கண்டெய்னர்) எந்த விலையென்றாலும் வாங்கத் தயார்.
இ) இயற்கை முறையில் விளைவித்த பாரம்பரிய "மாப்பிள்ளை சம்பா" அரிசி விற்பனைக்கு, கிலோ உரூபாய் 60/-
ஈ) கொலு பொம்மை விற்பனைக்கு,

3. பால், புதுச்சேரி / 9443643905
வான் கோழிக் குஞ்சு - 100 குஞ்சுகள் தேவை

4. குமார், கும்பகோணம் / 9500296215
போயர் இன ஆட்டுக்குட்டிகள், ஆண், பெண் குட்டிகள் - 1 முதல் 5 சோடி வரைத் தேவை.

5. செல்வக்குமார், பாடி புதுநகர், சென்னை / 9841677500
துளசிச் செடிகள் 500 எண்ணிக்கைத் தேவை.

6. சுரேசு, 9443216047
மூலிகைகள் தேவை:
கீழா நெல்லி - செப். முதல் வாரத்திற்குள் 2 டன் வரை தேவை (கிலோ 25 முதல் 30 வரை), சிறுகுறிஞ்சான் 2 முதல் 3 டன் வரை, கிலோ 45 உரூபாய்.

7.சுப்ரமணி, வெள்ளாவம்புத்தூர், திருப்பூர் மா / 9944687741
வெங்காயம் விற்பனைக்கு, கிலோ உரூபாய் 13/-

8. சரவணன், சென்னை / 9840036975
வெண்ணிலா செடிக் கன்றுகள் தேவை.

9. கிருட்டிணமூர்த்தி, சிதம்பரம் / 9994865946
5 ஏக்கர் விவசாய நிலம், சிதம்பரத்தை அடுத்த பகுதிகளில் தேவை. ஏக்கர் உரூபாய் 70000/- வரை.

மதிப்புக்கூட்டியப் பொருள் அறிமுகம்:

1. சர்க்கரை நோயளர்களுக்காண தேநீர்:
தேநீர்த் தூள் 70%, ஸ்டீவியாத் தூள் 30% கலந்தது. ஸ்டீவியா அதிக இனிப்புடன், 0% கலோரி உள்ள மூலிகை. இதனால் சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரை அளவு கூடுவதில்லை. 125கி. உரூபாய். 90/-.

2. சந்தன மரக் கொட்டைகள்:

சந்தன மரக் கொட்டைகள் உரூபா 200/ - 300/- மதிப்புடையது, அதிகபட்சமாக 500/- மதிப்புடையதை வாங்கி, மரக்கன்று படுக்கைத் தயாரித்து, வளர்த்து, கன்றுகளை உரூபாய். 15 முதல் 20க்கு விற்கலாம்.

காலக்குறிப்புகள்:
1. விதை உற்பத்தி குறித்தான பயிற்சி: ஆகசுட்டு -18, நாட்டுக்கொடிகள் வளர்ப்பு பயிற்சி: ஆகசுட்டு -20. இவ்விரண்டு பயிற்சிகளும் பிள்ளையார் பட்டி, பஞ்சாப் நேசனல் வங்கியினால் வழங்கப்படுகிறது. தொடர்பு: 04577 -295716.

2. பழப்பயிர்கள் குறித்தான பயிற்சி, குன்றக்குடி "கிருசி விஞ்ஞான் கேந்திரா" வினால் ஆகசுட்டு - 20 நாள் வழங்கப்படுகிறது. தொடர்பு எண்: 04577 - 264288.

3. வான் கோழி வளர்ப்பு பயிற்சி, ஆகசுட்டு -20ல் நாமக்கலில் நடைபெறுகிறது. தொலைபேசி எண்: 04286 - 266345.

4. காளான் வளர்ப்பு மற்றும் மதிப்புக்கூட்டுதல் பயிற்சி: ஆகசுட்டு -19ல் சென்னை, நகர்புற தோட்டக்கலை வளர்ச்சி மையத்தினால் வழங்கப்படுகிறது. தொடர்பிற்கு: 044 - 2626 3484.

5. கால்நடை மருத்துவ அறிவியல் கல்லூரி வழங்கும் அஞ்சல் பயிற்சிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகசுட்டு -24. தொடர்பு எண்: 044 - 2555 4375.

நன்றி.

உழவர் சந்தை நிகழ்ச்சி ஓர் அறிமுகம்


உழவர் சந்தை:
மக்கள் வழங்கும் முத்தான மூன்று விவசாய நிகழ்ச்சிகளில் முதன்மையான நிகழ்ச்சி எதுவென்றால், பெரும்பாலானோரின் வாக்கு உழவர் சந்தை நிகழ்ச்சிக்குத்தானிருக்கும். அந்த அளவு விவசாயம் சாராத மக்களையும் கூட தன்பக்கம் ஈர்த்த ஒரு நிகழ்ச்சியாக விளங்குகிறது. அதற்கு முதற்காரணம் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பான பங்களிப்பை நல்கிவரும் தகவல் களஞ்சியம் அய்யா ஹரிதாஸ் அவர்களாகும். மக்கள் தொலைக்காட்சியோடு இணைந்து இவர் செய்து வரும் சாதனையென்பது, அரசால் அறிவிக்கப்பட்ட பசுமைப்புரட்சி, வெண்மை புரட்சியெல்லாம் கடந்த, மக்கள் பங்களிப்போடு கூடிய உண்மையான ஒரு விவசாயப் புரட்சியாகும்.

இந்நிகழ்ச்சியில் பங்குகொள்ளும் பலரும், இந்நிகழ்ச்சியின் காரணமாகவே தாங்கள் புதியதாக விவசாயத்திற்கும் அது சார்ந்த தொழிலுக்கும் வருவதாகக் கூறுவதே இதற்குத் தக்க சான்றாகும்.

அதை மெய்ப்பிக்கும் வகையிலேயே, இந்நிகழ்ச்சியின் நோக்கமாக இவர் கூறும், “சரியான தகவல், சரியான நபருக்கு, சரியான நேரத்தில் சென்றடைய வேண்டும்” என்பதும், தகவல் பரிமாற்றம், விவசாயம் சார்ந்த விற்பனை மற்றும் தேவையை நிறைவேற்றுவது எனும் கூற்றுக்கள் உள்ளதைக் காணலாம்.

உழவர் சந்தை நிகழ்ச்சியில் தொடக்கமாக, சந்தை மற்றும் பொருளாதார நிலைகளைப் பற்றிய அறிவிப்பினை ஹரிதாஸ் அய்யா அவர்கள் வழங்குகிறார்கள். அடுத்து, நேயர்களின் தொலைபேசி அழைப்புக்களுக்கு பதிலலிக்கிறார்.

அடுத்து வரும் இடைவேளைக்குப் பிறகு, மதிப்புக்கூட்டுதல் என்ற நிகழ்ச்சியில், சிறந்த மதிப்புக்கூட்டப்பட்ட பொருளினை அறிமுகம் செய்கிறார். அதைத் தொடர்ந்து மீண்டும் நேயர்களின் கேள்விக்கு பதில்லிக்கிறார்.

சிறிது இடைவெளியில், இரண்டாவது இடைவேளையும் தொடர்ந்து மீண்டுமொரு மதிப்புக்கூட்டிய பொருளினை அறிமுகம் செய்கிறார். அடுத்து நேயர்களின் கேள்களுக்கு பதிலலித்துவிட்டு, நிகழ்ச்சியின் இறுதியில் வரும் நாட்களில் நடைபெறும் விவசாயம் சார்ந்த பயிற்சிகள், நிகழ்ச்சிகள் குறித்தான குறிப்புக்களை வழங்குகிறார்கள்.

இந்நிகழ்ச்சியில் பங்குகொள்ளும் எவரும் வரும்காலங்களில் சிறந்த தொழிமுனைவராகவும், விவசாயியாகவும் வருவதோடு, உணவு உற்பத்தியிலும் பொருளாதார மேம்பாட்டிற்கும் பெரும் பங்காற்றக் கூடியவர்களாக வருவர் என்பது உறுதி.
இந்நிகழ்ச்சியில் பங்குகொள்ள அழைக்க வேண்டிய மக்கள் தொ.கா. எண் : 044-2826 1111.
அய்யா ஹரிதாஸ் அவர்களின் கைப்பேசி எண் : 9444146807


மக்கள்... மக்களுக்காக... மக்களால்...
மக்களே வாருங்கள்... மக்களுக்கு வாருங்கள்... மகிழ்வோடு வாழுங்கள்...
நன்றி

மக்கள் விவசாயம் அறிமுகம்

வணக்கம்,

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்

தொழுதுண்டு பின்செல் பவர்.

குடிமக்கள் மேம்பாட்டை கருத்தில்கொண்டு சமூக பங்களிப்போடு கூடிய நிகழ்ச்சிகளை பாரம்பரியம் காத்திடும் வகையிலும், தாய்மொழியை வளர்த்திடும் நோக்கிலும் "மண் பயனுற வேண்டும்" என்ற கருத்தினைக் கொண்டு மிகத்திறம்பட வலம் வரும் மக்கள் தொலைக்காட்சியில் இடம் பெரும் விவசாய நிகச்சிகளான "மலரும் பூமி" "உழவர் சந்தை" ஆகியவற்றில் இடம்பெறும் தகவல்களை மீளத்தருவதை நோக்கமாகக் கொண்டு தொடங்கியுள்ளேன்.



இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்போரும் பார்வையாளர்களும் வேண்டுவது இந்நிகழ்ச்சிகளின் மறு ஒளிபரப்பாகும். அத்தேவைகள் சிறிதேனும் நிறை வேறுமாயின் அதுவே இவ்வலைப்பூவின் வெற்றியாகக் கருதப்படும்.



மக்கள் வழியில், மக்களின் பங்களிப்பை உறுதி செய்யும் விதமாக பிறர் தரும் தகவல்களும் இடம்பெறச் செய்வோம். தகவல் கிடைக்கப் பெற்றவர்கள் அனுப்பித்தரலாம், வரவேற்கிறோம்.



மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளிலிருந்து பெறப்பட்ட தகவல்கள் பலவற்றை குறித்து வைத்திருந்ததினால் அவற்றை பிறர் பயன்படச் செய்யவேண்டும் என்பது பலநாள் திட்டம். அதை செயல்படுத்திட எண்ணி, ஆக்கப்பணிகள் செய்து கொண்டிருக்கும் போது, வாசலில் பூக்காரரின் அழைப்பு, கதவைத் திறந்தவுடன் "அய்யா ஹரிதாஸ்" அவர்களின் குரலைக் கேட்டவர், மக்களில் இடம்பெறும் ஏற்றுமதி நிகழ்ச்சியில் வருபவரின் தொலைபேசி எண் கிடைக்குமா என்று வினவினார். மக்களின் வெற்றியை உணரமுடிந்தது. கூடவே, எனது இம்முயற்சியின் தெவையும்.

மண்பயனுறச் செய்யும் இவர்களின் நோக்கம் புரிந்து, அனுமதிகூட இல்லாமல் இதைத் தொடங்குகிறேன், அரவணைப்பார்கள் என்ற புரிதலோடு. வளர்க மக்கள் தொலைக்காட்சியின் தொண்டு.

நன்றி.